திருப்பூரில் மின்சாரம் தாக்கி மரத்தில் தொங்கிய முதியவர்.!!

மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கிய முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் அருகே மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கிய முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது. இதனிடையே முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம், நந்தவனபாளையம் பகுதியைச் சேர்ந்த 75-வயது முதியவர் முத்து, மரம் ஏறி தேங்காய் போடும் தொழிலாளி. 40 வருடங்களுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே இன்று அப்பகுதியில் உள்ள 65-அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏரி தேங்காய் போடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சார வயர் ஆனது, தென்னை மட்டையில் பட்டு முத்துவின் உடலில் பாய்ந்தது.

இதில், மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவர் முத்து குறித்து அப்பகுதியினர், தீயணைப்புத்துறையினருக்குக் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையின் ஏணியின் மூலம் மரத்தில் ஏறி, முதியவரை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது.



இதனிடையே முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...