கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலி..!

உயிரிழந்த காட்டு யானையை தாய் யானை தும்பிக்கையால் எழுப்ப முயலும் காட்சி பார்ப்போரின் கண்களை கலங்க செய்துள்ளது.



கோவை: கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா தமிழகம் ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உலா வருவது வழக்கம்.

குறிப்பாக, தமிழக கேரள எல்லையைப் பிரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் ஊர் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதும், பள்ளங்களில் விழுந்தும், மின் வேலியில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணை அருகில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தைக் கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானையை தன் தும்பிக்கையால் தட்டு தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதனையடுத்து, ஆண் யானை அங்கிருந்து செல்லவே வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். உயிரிழந்த காட்டு யானையை தாய் யானை எழுப்ப முயலும் காட்சி பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...