கோவையில் துவங்கப்பட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயற்குழு கூட்டம்..!

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் முதலில் துவங்கப்பட்ட கோவை ஒருங்கிணைந்த மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் மூலம் விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றது. இதனை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக துணை பொது செயலாளர் இவ்விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.


கோவை: தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் முதலில் துவங்கப்பட்ட கோவை ஒருங்கிணைந்த மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம் மூலம் விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களைப் பெற்று வருகின்றார்.

கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இன்று துவங்கியது. இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படுகின்றது.

கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.

கோவை மாவட்டம் முழுவதும் இருந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்கின்றனர். இதனை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக துணை பொது செயலாளர் இவ்விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.

செயற்குழு கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சியது, இன்று உள்ளாட்சித் தேர்தலுக்காகத் துவங்கும் விருப்பமனு தாக்குதல் வரும் 19 ம் தேதி வரை நடைபெறும். யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். பாரபட்சம் ஏதுவுமின்றி வாங்கப்படும். இந்த விருப்ப மனு தாக்கலை பரிசீலித்த பின்னர், தலைமை அறிவிக்கும் நபர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர் வரிசையில் நின்று பிரச்சினை ஏற்படுத்தினால் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எதிரிகள் என்ன செய்கின்றனர் என்பதைப் பார்த்து முணுமுணுப்பது சரியாக இருக்காது. கோவை மாவட்டத்தில் ஏன் தோற்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 275-வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும். முதல்வர் யாரை வேட்பாளராக அறிவிக்கின்றாரோ அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும், அனைவரும் கலத்தில் பணியாற்ற வேண்டும்.

கோவையில் 2298 வாக்கு சாவடிகள் இருக்கின்றது. ஒரு வாக்கு சாவடிக்கு 12-பேர்க் கொண்ட குழு கட்டாயம் பணியாற்ற வேண்டும். அனைவரும் மக்களைச் சந்திக்க வேண்டும்.

வாக்குகளை நேரில் சென்று சேகரிக்க வேண்டும். பதவியில் இருக்கின்றேன், மக்களைப் பார்க்க முடியாது என நினைப்பவர்கள் பூத் கமிட்டியில் சேர வேண்டாம். தேர்தலுக்கு முன்னதாகவே 4 நாட்களில் பூத் கமிட்டி உருவாக்கிட வேண்டும்.

வரும் 22ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்றார். ஒரு லட்சம் பேர் திரண்டு முதல்வரை வரவேற்க வேண்டும். பூத்திற்கு 50 பேரை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டும். விமான நிலையத்திலிருந்து வ.ஊ.சி மைதானம் வரை ஒதுக்கப்படும் இடங்களில் பொறுப்பாளர்கள் பணியாற்றிட வேண்டும்.

கோவைக்கு, பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க இருக்கின்றார் . 102 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் 80 ஆயிரம் வரை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மனுக்கள் வரை மனு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை பூத் கமிட்டியில் இருப்பவர்கள் உறுதி செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் இன்னும் சில அரசு அதிகாரிகள், அதிமுக சொல்வதைக் கேட்பதாக மக்கள் சொல்கின்றனர்.

நான் அப்படி பார்க்கவில்லை. நம்முடைய செயல் பாட்டில்தான் எல்லாம் இருக்கின்றது. அரசு விழாக்களில் கட்சியினர் பொறுப்பை உணர்ந்து கலந்து கொள்ள வேண்டும். சால்வை, பூங்கொத்து போன்றவற்றைக் கோவை மாவட்டத்தில் கட்சியினர் இனி கொடுக்க வேண்டாம் என்றார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...