தி.மு.க பேச்சாளர்கள் 9-பேர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ்.!!

கோவை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 9-பேர் மீதான வழக்கை திரும்ப பெற, மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பினார். அதன்படி, தி.மு.க., பேச்சாளர்கள் மீது நிலுவை வழக்குகள், நீதிமன்றத்தில் முறைப்படி மனுத் தாக்கல் செய்து திரும்பப்பெறப்படுகிறது.


கோவை: அ.தி.மு.க., ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட, தி.மு.க., பேச்சாளர்கள் மீதான அவதூறு வழக்கு திரும்பப்பெறப்படுகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில், 2011-2016ல், ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கோவையில் பல்வேறு இடங்களில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.

அப்போது, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, தி.மு.க., பேச்சாளர்கள் அதிரடி அல்தாப், ஆடுதுறை உத்திராபதி, கரூர் முரளி, கரூர் கணேசன், சேப்பாக்கம் பிரபாகரன், குடியாத்தம் குமரன், கோவை வக்கீல் அருள்மொழி, ஒப்பிலாமணி ஆகியோர் மீது, கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

அரசியல்வாதிகள் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற, அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கடந்த, ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 9-பேர் மீதான வழக்கை வாபஸ் பெற, மாவட்ட ஆட்சியர், அரசு வழக்குரைஞருக்குக் கடிதம் அனுப்பினார்.

அதன்படி, தி.மு.க., பேச்சாளர்கள் மீது நிலுவை வழக்குகள், நீதிமன்றத்தில் முறைப்படி மனுத் தாக்கல் செய்து வாபஸ் பெறப்படுகிறது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...