வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்.!

காட்டு யானைகள் எஸ்டேட் அலுவலகத்தையும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து தீப்பந்தங்கள் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: வால்பாறையில் காட்டு யானைகள் எஸ்டேட் அலுவலகத்தையும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

யானைகள் நடமாட்டத்தால் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகைக் கடைகள் சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து உள்ளே இருந்த உணவு பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



நேற்றிரவு வால்பாறை அருகே ஊசிமலை மற்றும் எஸ்டேட் பகுதியில் 8-காட்டு யானைகள் வனப் பகுதியிலிருந்து குடியிருப்புக்குள் நுழைந்து எஸ்டேட் அலுவலக ஸ்டோர் ரூமில் இருந்த பொருட்களை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியது.



அருகிலிருந்த தேவாலயத்தின் ஜன்னல் கதவை உடைத்துச் சேதப்படுத்தியது.



தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து தீப்பந்தங்கள் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.

யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...