கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக தகவல்.!!

கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.


கோவை: கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

கோவை கருமத்தம்பட்டி வீரமாத்தி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக நடத்துனரின் 15 வயது மகள் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இவர் கடந்த 12-ஆம் தேதி வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் செல்லவில்லை. மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மாணவி டெல்லியில் கால்பந்து அணியில் சேர்வதற்காகத் தனியாகக் கோவையிலிருந்து ரயிலில் டெல்லி சென்றது தெரியவந்தது.

நேற்று டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாணவியின் தந்தை மற்றும் போலீசார் தொலைப்பேசியில் பேசினார். அப்போது அந்த மாணவி பெற்றோரை வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...