கோவையில் மது அருந்திய 3-பேர் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம்: மதுவில் விஷம் கலந்தவர் கைது..!

கோவையில் தீபாவளியன்று விடிய விடிய மதுபானம் அருந்தியதால் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு முன்பகை காரணமாக மதுவில் விஷம் கலந்த அப்பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் தீபாவளியன்று விடிய விடிய மதுபானம் அருந்தியதால் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), சக்திவேல் (60). இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். தென்காசியைச் சேர்ந்த முருகானந்தம் (55) முருகானந்தம் சமையல்காரராக பணியாற்றி வந்தார். கோவையில் தங்கி இருந்ததில் இவர்களுடன் நண்பராகியுள்ளார்.

நண்பர்களான மூவரும் அவ்வப்போது ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மது அருந்திக் கொண்டாட முடிவு செய்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் மறுநாள் விடுமுறை என்பதால் கூடுதலாக மது அருந்த எண்ணி மாலை 6.30 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மது வாங்கி பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.

விடிய விடிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர். காலையில் மது அருந்தி முடித்தவுடன் சக்திவேல் தனது வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். மூவரும் அப்பகுதியை விட்டு கிளம்பியுள்ளனர். சக்திவேல் போதை அதிகமானதால் செல்லும் வழியில் கீழே அமர்ந்துள்ளார்.

உட்கார்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரைத் தொடர்ந்து முருகானந்தம் வழியிலேயே சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் போலிஸாருக்கு புகார் அளித்த நிலையில் போலிஸார் இருவரது உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பார்த்திபன் தனது வீட்டருகே இறந்த நிலையில் கிடந்தார். பின்னர் அவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் மது அருந்தப் பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியிலுள்ள தடயங்களை எடுத்துச்சென்றனர்.

ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விடிய விடிய மதுபானம் அருந்தியதால் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. முன்பகை காரணமாக மதுவில் விஷம் கலந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (63) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...