கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல்.!

கோவையில் 2-பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கோவையில் மழை பொழிவு ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாகப் பொதுமக்களுக்குச் சளிக் காய்ச்சல் உபாதைகள் ஏற்பட்டுச் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி கோவை முழுவதும் கிட்டத்தட்ட 64 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் சானிடைசர் கொண்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் பொதுமக்களுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக அரசு ஆரம்பச் சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல வீட்டின் முன்புறம் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...