அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.!

அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது. இதில் மாதர், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும்.


கோவை: அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் மரணத்துக்குப் பள்ளி நிர்வாகம் காரணமாக இருப்பது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க உடனடியாக அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது மீதான ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாணவி புகார் அளித்துள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அம்மாணவியைக் கண்டிக்கும் நடவடிக்கையில் தலைமை ஆசிரியை ஈடுபட்டுள்ளார்.

அச்சம்பவத்தைக் கண்டித்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்சோ சட்டத்தின் கீழ், பள்ளி ஆசிரியரும், குற்றத்திற்குத் துணை போன தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவம், குறித்துக் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், துரித விசாரணை நடத்தி உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். கோவை மாவட்டத்தில், கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது, தொடர் கதையாகி வருகிறது.

பல்கலைக் கழக மானியக்குழு வழிகாட்டியுள்ள internal complaints committee (ICC) குழுவை எல்லா கல்வி நிலையங்களிலும் அமைக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மாணவ – மாணவிகளிடம் உண்டாக்கவும் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட அளவிலும் இது போன்ற கண்காணிப்புக்குழு அமைக்கப்படக் கேட்டும்,

அதில் மாதர், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர், வழக்கறிஞர் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம் பெறச்செய்ய வேண்டும். மேலும் இறந்த மாணவி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...