சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி இன்று நாம் தமிழர் கட்சி, கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.


கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி இன்று நாம் தமிழர் கட்சி, கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.



பாலியல் கொடுமைக்கு உள்ளாகித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி படித்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் சாராத அரசு தரப்பு அதிகாரிகள் மற்றும் பொதுநலவாதிகள் கொண்ட குழு முழு விசாரணை செய்யக்கோரியும், 17 வயது மாணவி படித்த R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தக் கோரியும் இன்று நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.



ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக அரசும் ஏற்கனவே இது சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.



அடுத்ததாக மாணவியின் வீட்டிற்குச் சென்று அவருடைய தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் இந்நீதி கேட்கும் முன்னெடுப்பில் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுடன் துணை நின்ற மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் உட்பட அனைத்து கோவை மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இம்முன்னெடுப்பிற்கு எங்களுக்குச் சட்ட ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் விஜயராகவனுக்கு நன்றி கலந்த வணக்கங்களைத் தெரித்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...