இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் உயிரிழந்த விவகாரம்: குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல்!

கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவரை காவலில் எடுத்து விசாரிக்க 7-நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், நாளை மனு மீதான விசாரணை.


கோவை: கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவரை காவலில் எடுத்து விசாரிக்க 7-நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், நாளை மனு மீதான விசாரணை நடக்கிறது.

அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளைப் பெங்களூருவில் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் கடந்த 12 ஆம் தேதி கைது செய்தனர்.

இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா(38), அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் வசித்து வந்தவர், 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்றுச் சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.

இந்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...