மேற்கு மண்டலத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10-க்குட்பட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10-க்குட்பட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10-க்குட்பட்ட கருணாநிதி நகரில்‌ உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடம்‌ தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா? தண்ணா்‌ வசதி, மின்சார வசதி உள்ளதா என்பதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார் ராஜ கோபால்‌ சுன்கரா, நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கழிப்பிடத்தைச் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டுமென அங்கு பணியில்‌ ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம்‌ அறிவுறுத்தினார்‌.



தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள உள்ள பொதுமக்களிடம்‌ குறைகளைக்‌ கேட்டறிந்து, கழிவுக்‌ கால்வாய்‌ சுத்தம்‌ செய்திட வேண்டும்‌ எனவும்‌, பழுதாகியுள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்து பராமரிக்க வேண்டும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ குறைகளின்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, இராமசாமி வீதி, எம்‌.ஜி.ஆர்‌.மார்க்கெட்‌ பின்புறம்‌ மக்கும்‌ குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தின்‌ செயல்பாட்டினை குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு, கேட்டறிந்தார்‌.

இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்‌ சண்முகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...