திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் பலியான சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி..!

காப்பாற்றச் சென்ற நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி வித்தியாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் பலியான நிலையில், மேலும் ஒருவர் பலியானார்.

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் ராமகிருஷ்ணன், வடிவேல், நாகராஜ் என்ற 3 பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் உள்ளே இறங்கி ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறியுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியில் இருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும், நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்றச் சென்றுள்ளனர்.

இதில் விஷவாயு அதிகமாக தாக்கி வடிவேலு என்ற நபரும், காப்பாற்றச் சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர். நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்கிற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருந்த நிலையில், தீயணைப்பு வீரர் பாண்டீஸ்வரன் உயிரை பணயம் வைத்து தொட்டிக்குள் இறங்கி 3 பேரை காப்பாற்றினார்.

இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் ராஜேந்திரன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த தலைமையிலான போலீசார் சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில், இறந்தவர்களின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து, திருப்பூரில் 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாயப்பட்டறையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபரங்கள் சேகரித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...