நீட் மற்றும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நீட் மற்றும் ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யக்கோரி கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் மற்றும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வு மற்றும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 20-பேர் இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கை சட்ட நகலை, மாணவர்கள் எரிக்க முயன்றனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றனர்.
அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் கூறும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், குலக்கல்வி முறையை மீண்டும் புகுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாகவும், இந்த அரசு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 20-பேரை போலீசார் கைது செய்தனர்.