ஆதரவற்றோர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மாணவர்கள் இணைந்து இன்று கிறிஸ்துமஸ் தினத்தினை ஆதரவற்றோர், முதியோர் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் கொண்டாடினர்.



ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி துறையின் மாணவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக்குகளை தயாரித்து அதனை ஆதரவற்றோர் இல்லங்களில் வழங்கி கிறிஸ்துமஸ் தினத்தினை கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இவ்வருடம், கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு கோவைபுதூரில் அமைந்துள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் சில்ரன் என்னும் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திலும், மற்றும் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள செசிர் ஹோம் (Cheshire) உள்ளிட்ட இடங்களில் தாங்கள் தயாரித்த கேக்குகளை கொடுத்து கொண்டாடினர்.



மேலும், அதன் ஒருபகுதியாக சமையல் அறிவியல் துறையின் சார்பாக ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் வளாகத்தில் கேக்குகள் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் உள்ளிட்டு ஆசிரியர்கள் சதிஷ்குமார், அர்ஜுனன், ரதிகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...