விசாரணையில், நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் மூதாட்டியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.
நீலகிரி: ஊட்டியில் மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் போக்குவரத்து எஸ்.ஐ.,யாக இருப்பவர் பஷீர் அகமது (50). இவர் ஊட்டி பிங்கர்போஸ்டில் புதிய கட்டிடம் கட்டி வருகிறார்.
இது தொடர்பாக, நில உரிமையாளரான மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து எஸ்.பி., ஆசிஷ் ராவத் கூறுகையில், ''விசாரணை நடத்தியதில் எஸ்.ஐ., பஷீர் அகமது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் மூதாட்டியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்,'' என்று தெரிவித்தார்.