கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

நீட் தேர்வு குறித்து அச்சங்கள் எழுந்து வந்த நிலையில், தொடர்ந்து மாணவர் தற்கொலை ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ- மாணவிகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மாணவ, மாணவிகளுக்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது.

இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் மாணவிகள் தாரணி பிரியா, சரிகா, சாகாவானஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்,

இந்த பள்ளியில் தொடர்ந்து நீட் மற்றும் கே.இ.இ போன்ற தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...