தமிழ்நாட்டில் அனேகமாக தேசிய நெடுஞ்சாலைகளின் கீழ்வரும் அனைத்து சுங்கச்சாவடிகளும், விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கோவை: தமிழ்நாட்டில் அனேகமாக தேசிய நெடுஞ்சாலைகளின் கீழ்வரும் அனைத்து சுங்கச்சாவடிகளும், விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் பிரதமர் நரோந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனேகமாக தேசிய நெடுஞ்சாலைகளின் கீழ்வரும் அனைத்து சுங்கச்சாவடிகளும், விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதை தங்களது மேலானகவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறோம்.
உதாரணத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சுங்கச்சாவடி விதிகளை சரியாக பின்பற்றும் நேரத்தில், தமிழ்நாடு மட்டும் விதி விலக்காக குறைந்த தூரத்திற்குள்ளேயே ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்ககட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகிறார்கள்.
சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டர் இருக்கவேண்டும் என்கிற விதி தமிழ்நாட்டில் பல இடங்களில் பின்பற்றப்படுவதில்லை. அதேபோல சுங்க வசூல் காலக்கெடு முடிந்த பின்னரும் சுங்க கட்டண வசூல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணம் சுங்க வசூல் என்ன தேதியிலிருந்து வசூலிக்கப்படுகிறது என்பதோ, என்னதேதி வரை சுங்ககட்டணம் வசூலிக்கப்படும் என்பதோ அதை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு தகவலாக நன்கு தெரியும் படி அறிவிப்பு வைப்பதே இல்லை. சுங்க கட்டணம் செலுத்தும் போது கட்டணம் எவ்வளவு என்பதை எப்படி நாம் பார்க்க முடிகிறதோ அதேபோல சுங்ககட்டணம் எந்த தேதியில் இருந்து எந்த தேதியில் வரை வசூலிக்கப்படும் என்பதும் தெளிவாக பிரதான அறிவிப்பு வைக்கப்படுவதில்லை.
இது சரியாக கடைபிடிக்கபடாத காரணத்தினால் தான் கடலூர் போன்ற மாவட்டங்களில் சுங்க கட்டண வசூல் கெடு தேதி முடிந்த பிறகும் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்கள் சட்டத்திற்குப் புறம்பானது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
அதே போல கடந்த சில மாதங்கள் வரை ஒரு வாகனம் ஒரு வழிப்பாதையில் 24-மணி நேரத்திற்குள்ளாக சென்று மீண்டும் திரும்புவாரேயானால் அதற்கு குறைந்த கட்டணமே கட்டவேண்டி இருந்தது. ஆனால் தற்பொழுது அவர் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் திரும்புவாரானுலும், போகும் போதும் ஒரு கட்டணமும் வரும் போது ஒரு கட்டணமும் என தனித்தனியாக கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் சாலையை பயன்படுத்தி எப்படி கொள்ளைவசூல் நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். அதேபோல Fastrack card வைத்திருப்போர் பயணிக்கும் போது தாங்கள் வைத்திருக்கும் நிலுவை தொகை போதுமானதாக இல்லாதபட்சத்தில் மீதித்தொகையை மட்டும் காசாகவசூலிப்பது என்பது மட்டும் தான் நியாயமாகும். ஆனால் தற்பொழுது மீதி தொகையை இரு மடங்காக வசூலிப்பது என்பது மிகமோசமான அணுகுமுறை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறோம்.
டோல் கேட்களில் அடிக்கடி கட்டணத் தொகை ஏற்றுவது மற்றும் கெடு முடிந்த பிறகும் கட்டணத்தை வசூல் செய்வது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது. பாலம் கட்டிய தொகையை வசூலித்து முடித்த பின்பும், 3-ஆண்டுக்கு ஒருமுறை என்று கட்டண தொகையை உயர்த்துவதற்கு பதிலாக, 5 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்ற வேண்டும்.
இப்படி எல்லாம் சுங்க கட்டணத்தை பல மடங்காக வசூலிக்கும் அதேநேரத்தில் செங்கப்பள்ளி சாலையில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடி போன்று பல சுங்கச்சாவடிகளின் சாலைகள் மிக மோசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறோம். மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் சிலவே, எனவே தங்கள் மேலான கவனத்தைச் செலுத்தி சுங்கத் சாலையில் வைக்கப்படும் கட்டணம், தேதி முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படும் விதம், தேவையற்றசாலைகள் இவை அனைத்தின் மீதும் தனி கவனம் செலுத்தி சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கடிதத்தில் கூறியுள்ளனர்.