காரமடை அருகே சிறுத்தை நடமாட்டம்.. பீதியில் மக்கள்!

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறியச் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து கூண்டு வைத்துப் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை அருகே ஆதி மலையனூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதி மலையனூர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை அன்று 2-கன்று குட்டியையும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனந்தன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியைச் சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வனத்துறை சார்பில் அப்பகுதியில் 4-கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரமடை வன அலுவலர் மனோகர் இடம் கேட்டபோது தற்போது பசு மாடுகள் மற்றும் நாய்களைத் தூக்கிச் சென்றது சிறுத்தை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் கண்டறியச் சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து கூண்டு வைத்துப் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...