கருமத்தம்பட்டியில் திருட்டு வழக்கில் முன்னாள் ஆயுதப் படை காவலர் கைது!

முன்னாள் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி திருட்டு வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர் கருமத்தம்பட்டியில், வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கருமத்தம்பட்டியில், வீடு புகுந்து கொள்ளையடித்த முன்னாள் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி திருட்டு வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருமத்தம்பட்டி அருகே உள்ள செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா(40). இவரது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2-பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது நிர்மலா தனது குழந்தைகளுடன் கருமத்தம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் செந்தில் நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு நிர்மலா அடிக்கடி செல்வதில்லை. இதனால் அந்த வீடு பெரும்பாலும் பூட்டிய நிலையிலேயே காணப்படும். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2-பேர் நேற்று இரவு நிர்மலாவின் வீட்டுக்குச் சென்று கதவின் பூட்டை உடைத்தது வீட்டின் உள்ளே சென்றார்.

அப்போது கதவின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் உள்ள நாகராஜ் என்பவர் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக அருகில் உள்ளவர்கள் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்தனர். அருகில் உள்ளவர்கள் வருவதை அறிந்த அந்த கொள்ளையர்கள் இருவர் வீட்டிலிருந்த வெள்ளி நகை மற்றும் லேப்டாப், ஆகியவை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

கொள்ளையர்கள் 2-பேரையும் துரத்தி பிடிக்க அருகிலிருந்தவர்கள் முயற்சித்தனர். அப்பொழுது ஒருவர் ஓடி விடவே மற்றொரு கொள்ளையனைப் பிடித்தனர். இதனை அடுத்து உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் காவல்துறையினர் அந்தக் கொள்ளையனிடம் இருந்த லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் வேடப்பட்டியை சேர்ந்த முனிஸ்வரன் (வயது 39) என்பதும் இவர் ஆயுதப் படையில் காவலராக இருந்த போது திருட்டு வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

தப்பி ஓடிய மற்ற ஒருவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ்காரராக இருந்தவர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, இதே வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 2 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...