கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள 23 குளங்கள் முழு கொள்ளவை எட்டின - விவசாயிகள் மகிழ்ச்சி..!

அனைத்து குளங்களும் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதுடன் குளிர்ந்த சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள 23 குளங்கள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆற்றின் கரைகளில் 25 குளங்கள் அமைந்துள்ளன. ஆற்றில் நீர்வரத்து இருக்கும் போது இந்த குளங்கள் அனைத்தும் நிரம்பும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கின்றது.

இந்நிலையில், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உட்பட 23 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நீலாம்பூர் குளம் மற்றும் குனியமுத்தூர் சிறுகுளம் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றது.

கோவையில் நொய்யல் ஆற்றையொட்டி உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வருவதால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து குளங்களும் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதுடன் குளிர்ந்த சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...