கல்லறை திருநாள்: கோவையில் தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்கு கிறிஸ்துவர்கள் மலர் அஞ்சலி..!

கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கோவை: இன்று உலகம் முழுவதும் கல்லறை திருநாள் கிறிஸ்துவ மக்களால் அனுசரிக்கப்படுவதை அடுத்து, தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்குக் கல்லறைத் தோட்டங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைபிடிப்பது வழக்கம்.



அதன் ஒருபகுதியாக, கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்குக் கோவையில் உள்ள கிருத்துவ மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.



இதற்காக, கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் முன்பாக தற்காலிகமாக மலர் கடைகளும், வாசனை திரவிய கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறைத் தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்குக் கல்லறைத் தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.



அதனைத்தொடர்ந்து, கல்லறைகளில் பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரை தெளிப்பார்கள். கல்லறை திருநாளையொட்டி வழக்கத்திற்கு மாறாக அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...