கனகராஜின் அண்ணன் தனபாலிடம் வழக்கு தொடர்பாக இன்னும் பல தகவல்களைக் கேட்க வேண்டியிருப்பதால் மேலும் 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை: கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களைக் கலைத்ததாக கைதான கனகராஜ் அண்ணனிடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல், எஸ்டேட்டிற்குள் நுழைந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பல்வேறு ஆவணங்களையும், பொருட்களையும் திருடிச் சென்றது.
இது தொடர்பாக, சயான் உட்பட 10 பேரை சோலூர் மட்டம் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விசாரணையை தனிப்படை போலீசார் மீண்டும் துவங்கி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி சயான் வாக்கு மூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து சாலை விபத்தில் மரணமடைந்த முக்கிய குற்றவாளி கனகராஜின் அண்ணன் தனபால், அவரது மனைவி மற்றும் மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் உட்பட 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சேலம் ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் விபத்து வழக்கையும் போலீசார் மீண்டும் விசாரித்தனர். விசாரணையின் அடிப்படையில் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் சாட்சியங்களைக் கலைத்ததாகவும், தடயங்களை அழித்ததாகவும் வழக்குப் பதிந்து கடந்த வாரம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தனபாலிடம் விசாரணை மேற் கொள்வதற்காக கடந்த 28ம் தேதி போலீசார் காவலில் எடுத்தனர். அதே போல, கடந்த 29ம் தேதி ரமேஷை போலீசார் காவலில் எடுத்தனர். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகவும், கனகராஜ் இந்த வழக்கு தொடர்பாக கூறியதையும் கேட்டு விசாரித்தனர்.
மேலும், கனகராஜின் செல்போன் தகவல்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது பல தகவல்களை தனபால் போலீசாரிடம் கூறியிருப்பதாக தெரிகிறது. தனபாலின் காவல் விசாரணை காலம் நேற்று முடிவடைந்தது. ஆனால் வழக்கு தொடர்பாக இன்னும் பல தகவல்களை தனபாலிடம் கேட்டுப் பெற போலீசார் முடிவு செய்தனர்.
எனவே தனபாலிடம் மேலும் 7 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மேலும் 5 நாட்கள் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணையைத் துவக்கி உள்ளனர். ரமேஷின் காவல் விசாரணைக் காலம் இன்று முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.