தொடர் மழையால் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. இதை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஊட்டி மலைரயில் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக 22-ம் தேதி கல்லாறு, ஆர்டர்லி, ரயில் நிலையங்கள் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. அந்தப் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
ஆனால், ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடந்துவருவதால் கடந்த 23-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்து, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. இதை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை வருகிற 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.