தீபாவளி: தமிழகத்தில் பட்டாசு வெடிக்க இரண்டு மணிநேரம் மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு..!

அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தீபாவளியன்று தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க இரண்டு மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் மனிதர்கள், விலங்குகளின் உடல்நலனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், 'மாசுவை குறைக்கும் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்.

வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்' என கடந்த 2018-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றொரு வழக்கிலும் சில நாட்களுக்கு முன்பு இதே தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், பேரியம் ரசாயனப் பொருள் கலந்த பட்டாசு, சர வெடிகளை தயாரிக்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு, கடந்த 2018 முதல் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரை,இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியன்றும் அதே நேரத்தில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதிக்கப்படும்.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று பசுமைப் பட்டாசுகளை மட்டும் காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல்8 மணி வரை வெடிக்க வேண்டும்.அதிக சத்தம் ஏற்படுத்தும் சரவெடிகளை வெடிக்கக் கூடாது.

மேலும், அமைதி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டு தலங்கள், குடிசைப் பகுதிகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...