மாநகராட்சி மற்றும் ஜனக்ரஹா அமைப்புடன் இணைந்து முதன் முறையாக வரி தண்டலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு முனிசிபல் பிரிமியர் லீக் போட்டிக்கான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஜனக்ரஹா அமைப்புடன் இணைந்து முதன் முறையாக வரி தண்டலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு முனிசிபல் பிரிமியர் லீக் போட்டிக்கான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஜனக்ரஹா அமைப்புடன் இணைந்து முதன் முறையாக வரி தண்டலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு முனிசிபல் பிரிமியா லீக் (Municipal Premier League) போட்டிக்கான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் இன்று 01.11.2021 குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
“இந்தியாவில் வேகமாக வளருகின்ற இரண்டு அடுக்கு நகரங்களில் நமது கோயம்புத்தூர் மாநகரமும் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெருநகரம் மற்றும் தொழில்துறை நகரங்களில் முன்னோடியான நகரங்களில் நமது கோயம்புத்தூர் மாநகரமும் ஒன்றாகும். 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நமது கோயம்புத்தூர் மாநகரில் ஏறத்தாழ 20-இலட்சத்திற்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது 2021-ல் மக்கள் தொகையானது 28-இலட்சங்களைக் கடந்து இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
எனவே, அதிகரித்து வருகின்ற மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மற்றும் ஏற்கனவே உள்ள உட்கட்டமைப்புகளைப் பராமரிக்கவும் போதுமான நிதி ஆதாரங்கள் நம் மாநகரத்திற்குத் தேவைப்படுகின்றது. இந்த இனிய நோக்கம் நிறைவேற்றுகின்ற வகையில் நமது வரி வசூலிக்கும் திறனை அதிகரித்து வருவாயினை மேம்படுத்தி நமக்கு போதுமான நிதி ஆதாரம் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
நிலையான நிதி ஆதாரத்தை அடைவதற்கு, நாம் சிறப்பாகவும், தைரியமாகவும் பலவிதமான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இது. முதல் முறையாகக் கோயம்புத்தூரில் (முனிசிபல் ப்ரீமியர் லீக்) நகராட்சி பிரீமியர் லீக் போட்டிகள் நவம்பர் மாதத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஜனக்ராஹா அமைப்புடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியானது, 52 வரி தண்டலா்கள் மற்றும் 5 உதவி வருவாய் அலுவலாகளுக்கு இடையே 4 வருவாய் இனங்களில் நடத்தப்படும். சொத்துவரி, தொழில் வரி, வரி இல்லா வருவாய் இனம் மற்றும் குடிநீர் கட்டணங்கள். கோயம்புத்தூர் மாநகராட்சி MPL வாயிலாக தனது நான்கு குறிக்கோள்களை அடைய உறுதிகொண்டுள்ளது.
எல்லா வரி இனங்களின் வருவாயினை அதிகரித்தல், வருவாய் அதிகாரிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல் மற்றும் கெளரவப்படுத்துதல், தரவுகளின் அடிப்படையில் வேகமாக முடிவெடுத்தல், குடிமக்களை மையப்படுத்தி நிலையான தொடர் பிரச்சாரங்களின் வாயிலாக குடிமக்கள் இடையே வரி செலுத்தும் பழக்கத்தை அதிகரித்தல், எங்களுக்கு தெரியும் உங்களுடைய வேலை அவ்வளவு எளிதல்ல என்று ஆகவே, உங்கள் பங்களிப்பை கெளரவிக்கவும், உங்கள் முயற்சிகளை அங்கீகரிக்கவும், ஒவ்வொரு மாதம் மற்றும் காலாண்டின் அடிப்படையில் உங்களுக்கு பல்வேறு விருதுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவீர்கள்.
உங்களின் இப்பயணத்தில், நாங்கள் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக நிற்போம். இந்நிகழ்வானது, மிகப்பெரிய வெற்றியை எய்திட, நீங்கள் ஒவ்வொருவரும் மிக சிறப்பான முன்னெடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்திடமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நவம்பர் மாதத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குழுவாக செயல்பட்டு, கோயம்புத்தூர் மாநகரம்தான் இந்தியாவில் தலைசிறந்த மாநகரம் என்று எல்லோராலும் போற்றி பாராட்டுகின்ற வகையில் செயல்படுவோம்.” என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷாமிளா, மண்டல உதவி ஆணையாளர்கள் டி.சிவசுப்பிரமணியம் (மேற்கு), என்.அண்ணாதுரை (தெற்கு), ஆர்.மோகனசுந்தரி (வடக்கு), செந்தில்குமார் இரத்தினம் (கிழக்கு), ஆர்.சுந்த்ராஜன்(மத்தியம்), ஜனக்ராஹா தலைமை நீர்வாக அதிகாரி ஸரீகாந்த் விஸ்வநாதன், நகராட்சி நிதி மேலாளர் நமிதா அகர்வால், மாநகராட்சி செயற்பொறியாளாரகள், உதவி செயற்பொறியாளார்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வரி தண்டலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.