வால்பாறையில் 5- காட்டுயானைகள் ரேஷன் கடை கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வெளியே தூக்கி வீசி நாசப்படுத்தியதால், பொருட்கள் விநியோகம் பாதிப்படைந்தது.
வால்பாறை: வால்பாறையில் 5- காட்டுயானைகள் ரேஷன் கடை கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வெளியே தூக்கி வீசி நாசப்படுத்தியதால், பொருட்கள் விநியோகம் பாதிப்படைந்தது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பல பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள நியாய விலை கடை, மளிகை கடை, பள்ளிக்கூடங்கள், சத்துணவு கூடங்கள், வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ளது நல்லமுடி தேயிலைத் தோட்டம். இப்பகுதி மக்களுக்கு நியாயவிலைக்கடை பொருட்களை வழங்குவதற்காகத் தாமரை மகளிர் சுய உதவி குழுவின் சார்பில், நியாயவிலைக்கடை நடைபெற்று வருகிறது.

நல்லமுடி தேயிலைத் தோட்டத்தில் குடியிருப்புகளின் மத்தியில் இந்த கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதிக்கு வந்த 5-காட்டு யானைகள் இந்த நியாய விலை கடையின் கதவு ஜன்னல் மற்றும் பக்கவாட்டு சுவரை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மைதா, மற்றும் மளிகை பொருட்களை வெளியே தூக்கி வீசி நாசப்படுத்தின.
இதன் காரணமாக பொருட்கள் விநியோகம் பாதிப்படைந்தது. காட்டு யானைகள் நியாய விலை கடையை உடைப்பதை அறிந்த அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டக் காவலர்கள் விரைந்து வந்து சத்தம் போட்டு காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் காட்டுயானைகளின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து காட்டுயானைகள் அப்பகுதியில், உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ளே வருவதால் இன்று இரவும் குடியிருப்புப் பகுதிக்கு மீண்டும் வரலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.