கத்தாங்கண்ணி பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் கத்தாங்கண்ணி பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கத்தாங்கண்ணி ராஜவாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2-வருடங்களுக்கு முன்பாக வாய்க்காலில் கான்க்ரீட் தளம் அமைக்கத் தண்ணீர் நிறுத்தப்பட்ட பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
பணிகளின் போதே 2-வருடமாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருந்துள்ளது. வாய்க்காலில் கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டு 6-மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் கத்தாங்கண்ணி ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை என்றும், தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.