கோவை மாநகராட்சி சாலைகள் சீர் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும்-அமைச்சர் செந்தில் பாலாஜி!

மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மாநகராட்சி பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சென்று வர சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டல பகுதிகளில் உள்ள 5, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. இதில் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் அந்தந்த அதிகாரிகளிடம் கொடுத்து அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் 23 இடங்களில் 12 ஆயிரத்து 959 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அந்தந்த அரசு துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்களில் முதியோர் உதவி தொகை தொடர்பாக அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் கோரியும் மனுக்கள் வந்துள்ளன. மேலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மனுக்கள் வந்துள்ளன.

கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், தொழில் நிறுவனங்கள் அடிப்படையிலும் சாலை கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.

சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மாநகராட்சி பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சென்று வர சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.

தேவைக்கு ஏற்ப புதிய சாலைகளும் அமைக்கப்படும். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...