கோவையில் 3-வயது குழந்தைக்கு முதுகு தண்டுவட சிதைவு நோய்: உதவக் கோரி பெற்றோர் மனு!

முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதிப்படும் 3-வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான நிதியை அரசு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதிப்படும் 3-வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான நிதியை அரசு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

“குழந்தைக்கு உதவ நினைப்பவர்கள் 70925-58807 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் நிதி வழங்கலாம்” என்றார்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோமிலா. இந்த தம்பதியினருக்கு ஜேசன் என்ற 3-மாத ஆண் குழந்தை உள்ளது.



இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் உள்ளது. இதற்காக ரூ.16-கோடி மதிப்பிலான தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. இந்த சூழலில், அமெரிக்க மருந்து நிறுவனம் குலுக்கல் முறையில் இந்த குழந்தைக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை செலுத்தியது.

இதனிடையே குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு 9-லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, அறுவை சிகிச்சை செய்வதற்கான நிதியை கொடுத்து உதவுமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து குழந்தையின் தாய் ரோமிலா கூறுகையில், "எங்கள் குழந்தைக்கு மூச்சு குழாயில் பிரச்சனை இருப்பதால் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மருத்துவ செலவு ரூ.9 லட்சம் வரை ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு உதவிட வேண்டும் என்று அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசு மற்றும் பொது மக்கள் எங்களுக்கு உதவ முன்வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...