சட்டப் போராட்டம் மூலமே நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகம் முழுவதும் 600 நாட்களுக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வந்துள்ளனர்.

பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின், நானும் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றோம். நீண்ட காலமாக மாணவர்கள் வீடுகளிலிருந்ததால் மன அழுத்தத்திலிருந்தனர்.



தற்போது குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வந்திருந்தாலும், மகிழ்ச்சியுடன் பாடங்களைக் கவனித்து வருகின்றனர். சுழற்சி முறையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது நீட் தேர்வு தமிழகத்தில் வராமல் இருப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலமைச்சரைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வு ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மாணவர்கள் தயவு செய்து தற்கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பள்ளி கல்வித்துறை வேலை முடிந்தது என்று இல்லாமல் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் மேல் படிப்பில் சேர்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அதை விட மாணவர்களின் உடல் நலம் முக்கியம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...