தீபாவளி பண்டிகை: பாதுகாப்பான முறையில் செயல்பட காவல்துறை அறிவுரை.!!

தீபாவளியையொட்டி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கவும், பட்டாசுகளை விற்பனை செய்திடவும் கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: தீபாவளியையொட்டி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கவும், பட்டாசுகளை விற்பனை செய்திடவும் கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

1. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பது என்பது முழுமையாகத் தடைசெய்யப்படவில்லை.

2. உச்ச நீதிமன்றத்தால் 31.07.2021 அன்று கொடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவுப்படி, ஆண்டிமணி, லித்தியம், மெர்குரி, ஆர்செனிக் காரீயம் மற்றும் பேரியம் உப்புக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

3. பசுமை பட்டாசுகள் தான் விற்பனை செய்ய வேண்டும் மற்றும் வெடிக்கப்பட வேண்டும்.

4. சரவெடிகள் விற்பனை செய்வதும், வெடிப்பதும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

5. Petroleum and Explosives Safety Organization (PESO) ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒலியை எழுப்பக்கூடிய பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் மற்றும் PESO வால் அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்துகள் அடங்கிய பட்டாசுகள் மாத்திரமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

6. அமைதியான பகுதிகள் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக மருத்துவமனைகள் நர்சிங் ஹோம்ல், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், கோவில் வளாகங்கள் மற்றும் எவையெல்லாம் அமைதிப்பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் இருந்து குறைந்த பட்சம் 100 மீட்டருக்கும் பட்டாக வெடிப்பது கூடாது.

7. தீபாவளி பண்டிகை நாட்களில் அல்லது பொதுவாக வெடித்து கொண்டாடப்படும் வேறு எந்த பண்புகையின் போதும் கண்டிப்பாக இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

8. பட்டாசுகள் விற்பனையானது உரிமம் வழங்கப்பட்ட விற்பனையாளர்களால் மட்டுமே விற்கப்பட வோண்டும்.

9. உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்திரவுகளை மீறி தன்னிச்சையாக கீழ்படியாமல் நடந்து கொள்பவர்கள் மீது தக்க குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

10. பட்டாசு கடைகளில் வெடிப்பொருட்கள் இருப்பு வைக்கப்படும் இடங்களிலும் மற்றும் விற்பனை இடங்களிலும் போதுமான அளவில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் ஆகியவற்றை விற்பனையாளர்கள் காட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...