வால்பாறை அருகே மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் மளிகை கடையை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்..!

அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் மளிகை கடை இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம், நியாய விலை கடை போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.



இந்நிலையில், வால்பாறை அருகே கேரளா மாநிலம் மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் ஏழு யானைகளின் கூட்டம் அங்கு உள்ள நடுபிரட்டு குடியிருப்புக்குள் நுழைந்து, அங்குள்ள செல்வராஜ் மளிகை கடை ஜன்னல் கதவு, சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளிருந்த சர்க்கரை உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் தீ பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானைகளை குடியிருப்பு பகுதியிலிருந்து விரட்டினர்.

இதனிடையே, அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...