பள்ளி மாணவர்களுக்கு விவசாய பாடம் நடத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை..!

தெலுங்கானாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: தமிழகத்தில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விவசாயம் சார்ந்த பாடம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-

"விவசாயிகள் பயன்படுத்தும் விதைகள், உணவு தானியங்கள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதைகள், பண்ணை விவசாயம் குறித்து பாடங்கள் நடத்தப்பட வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு தெலுங்கானாவில் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இதுபோல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...