மழை காரணமாக காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் கொதிக்கவைத்த குடி நீரை குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் குடிநீரில் குளோரின் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, சுகாதாரத்துறை சார்பில் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி ஊராட்சி பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் செல்வம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வீட்டில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் குளோரின் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் வீட்டில் டயர், தேங்காய் தொட்டி போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தற்போது மழை காரணமாக காய்ச்சல், தலைவலி, சளி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கொதிக்கவைத்த குடி நீரை குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.