அன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

விவசாயிகள் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்தனர்.



கோவை: கோவை அடுத்த அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவையை அடுத்த அன்னூர் பகுதியில், தொழிற்பேட்டை அமைக்க 4 வருவாய் கிராமங்கள் மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1504 ஹெக்டேர் நிலத்தை தமிழ்நாடு நில கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க, மாவட்ட ஆட்சியர் வாயிலாக, TIDCO வின் முதன்மை இயக்குநர் தமிழக அரசிடம் கோரியிருந்தார்.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று அன்னூர் பகுதியில் கிராம மக்கள் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி உள்ளனர்.

அந்த மனுவில், அன்னூர் சுற்றுவட்டார, குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 50,000 மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. இங்கு நடைபெறும் விவசாய பணிகளை நம்பியே விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.



இந்நிலையில், எங்களின் 70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல், என்பதற்கான முயற்சி எங்களை சோர்வடையச் செய்துள்ளது.

விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டது.



எனவே, விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது, தொழிற்பேட்டை திட்டம் ரத்து என்ற சட்டப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டி கேட்டுக் கொள்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...