கோவையில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு - பிரேதப் பரிசோதனையில் 40 வயது இளைஞர் என உறுதி..!

மேலும், அப்பகுதியில் இரண்டு லைட்டர்கள் மற்றும் ஷூ காணப்பட்டதை அடுத்து தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை அருகே எரிந்த நிலையில் எலும்புக் கூடு மீட்கப்பட்ட நிலையில், மருத்துவ பிரேத பரிசோதனை செய்த பின்பு 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்கும் வாலிபர் என உறுதி செய்யப்பட்டு போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

மதுக்கரை மரப்பாலம் பகுதியில் மட்டத்துக்காடு சாலையில் நேற்று மனித எலும்புக்கூடு கிடந்தது. போலீசார் சென்று பார்த்தபோது, எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடு இருந்தது.

மேலும், அருகே இரண்டு லைட்டர்கள், ஷூ காணப்பட்டன. தடயவியல் நிபுணர்கள், தடயங்களைச் சேகரித்தனர். அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயசிங் தலைமையிலான மருத்துவ குழுவினர், பிரேத பரிசோதனை செய்தனர்.

30-40 வயதுடைய ஆணின் எலும்புக்கூடாக இருக்கலாம் எனவும், ஒரு மாதத்துக்கு முன் சம்பவம் நடந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது. முக்கிய எலும்புகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

மதுக்கரை சுற்றுப்பகுதிகளில் யாரேனும் காணாமல் போனார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். எலும்புக்கூடு கிடந்த இடத்தில் சம்பவம் நடந்ததா, வேறு இடத்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...