கோவையில் பெண்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2-பேர் கைது.!!

தொண்டாமுத்தூர் அருகே பெண்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2-பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே பெண்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2-பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையத்தை சேர்ந்தவர் குணசுந்தரி (42). இவருடைய தோழி தமிழ்ச்செல்வி (40). இவர்கள் தொண்டாமுத்தூர் அரசு பள்ளி அருகே டெய்லர் கடை நடத்தி வருகின்றனர்.

அதே பகுதியில் டயர் கடை நடத்தி வருபவர் ஆனந்தன் (42). குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி (40). இந்த நிலையில் குணசுந்தரி, தமிழ்ச்செல்வி ஆகியோர், ஆனந்தன், சரவணமூர்த்தி ஆகியோரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி உள்ளனர்.

கொரோனா காரணமாக போதிய வருமானம் இல்லாததால் அவர்கள் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடிய வில்லை. இதனால் ஆனந்தன், சரவணமூர்த்தி ஆகியோர் வட்டிப்பணம் கேட்டு தொல்லை கொடுத்து உள்ளனர்.

மேலும், குணசுந்தரி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் வீட்டுக்கு ஆனந்தன், அவருடைய மனைவி மல்லிகா மற்றும் சரவணமூர்த்தி ஆகியோர் சென்று பணத்தை திருப்பி தர கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் மனு கொடுத்தனர். அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்களிடம் கந்துவட்டி கேட்டு ஆனந்தன், மல்லிகா, சரவணமூர்த்தி ஆகியோர் மிரட்டியது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, ஆனந்தன், அவரது மனைவி மல்லிகா மற்றும் சரவணமூர்த்தி ஆகிய 3-பேர் மீது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆனந்தன், சரவணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...