கோவையில் பிளஸ் 2 மாணவனை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு - குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு..!

புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் 12-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, சித்ரா பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (18). காளப்பட்டி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக சிட்ரா அருகே உள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அப்போது, சிறுநீர் கழிக்க அங்குள்ள ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த இரண்டு பேர், மாணவனிடம் மொபைல்போனை கேட்டு மிரட்டினர். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனை கீறிவிட்டு, 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போனை பறித்து தப்பினர். தலையில் காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து, புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...