வால்பாறையில் உள்ள 98 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.
கோவை: கோவை வால்பாறையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகளைக் கழுவி சமூக இடைவெளியுடன் பள்ளிகள் துவங்கப்பட்டது.
தமிழகத்தில் இரண்டு வருட காலமாக கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்ட சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், கொரோனா பெரும் தொற்று குறைந்து காணப்படுவதால் முதலமைச்சர் உத்தரவின் படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்தனர்.
இதனையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு கூறிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மாணவர்களைப் பள்ளியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 98 பள்ளிகளில் மாணவ மாணவிகள் வருகை தந்தனர். முதல் நாள் என்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
வால்பாறை அருகே நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுமார் 40 பேர் படித்து வருகின்றனர். இதில் குறைந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை வந்தனர்.

காலை 9 மணி அளவில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து அவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து, அதைப் பதிவு செய்து, பின்பு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து வகுப்புகளுக்குச் சென்றனர்.

பின்பு, மாணவ மாணவியர்கள் வருகை புரியும் போது பள்ளி வளாகத்தின் நுழைவாயிலில் மாணவர்களுக்கு சானிடேசர் வழங்கி கைகளை சுத்தம் செய்து, உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து, அதை ஒவ்வொரு பெயராக, வகுப்பாக பதிவேட்டில் பதிவு செய்து அரசு கூறிய நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பள்ளிக்கு வரவேற்றனர்.

மேலும், ஒவ்வொரு வகுப்புகளிலும் சமூக இடைவெளியுடன் ஒரு பெஞ்சில் 2 மாணவர்கள் மட்டும் அனுமதித்து, உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மேலும், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு ஆர்வத்துடன் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து விட்டுச் செல்கின்றனர். பள்ளியில் புதிதாக சேர்க்கும் குழந்தைகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் வரை புதிதாக சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தனர்.