கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!! 18 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு..!

இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022 ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.



கோவை: கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் 18 ஆயிரத்து 13 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் 15,19,419 ஆண் வாக்காளர்களும், 15,64,628 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 518 என மொத்தம் 30,84,565 வாக்காளர்கள் உள்ளனர்.



புதிதாக 8,798 ஆண் வாக்காளர்களும், 9,116 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், 15,476 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் பார்வையிடலாம். இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022 ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் இம்மாதம் 30-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். இந்த மாதம் 13, 14, 27 மற்றும் 28-ந் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பதிவு நீக்கம் செய்ய படிவம் 7, ஏற்கனவே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 8ஏ படிவம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மனுக்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...