கோவை‌யில்‌ விடுபட்டுள்ள அனைவருக்கும்‌ முதியோர்‌ உதவித்தொகை வழங்கப்படும்-அமைச்சர்‌ செந்தில்பாலாஜி.!!

தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 79, 85 முதல்‌ 100-வது வார்டு பகுதிகள்‌ வரை நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ அமைச்சர்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்‌.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கோவை தெற்கு தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 79, 85 முதல்‌ 100-வது வார்டு பகுதிகள்‌ வரை நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்‌.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உள்ள பொதுமக்கள்‌ தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ இதர வசதிகள்‌ தொடர்பான குறைகள்‌ குறித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடும்‌ வகையில்‌ கோவை தெற்கு தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வார்டு பகுதிகளில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி தலைமையில்‌ பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சி இன்று 31.10.2021 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ முன்னிலை வகித்தார்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வரவேற்புரையாற்றினார்‌. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.79 பொன்னையராஜபுரம்‌, சலிவன்‌ வீதி, மாரண்ண கவுண்டர்‌ மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளி, வார்டு எண்‌.85 செல்வபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.86 கரும்புக்கடை அத்தர்‌ ஜமாத்‌ உயர்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.87 குனியமுத்தூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.88 குனியமுத்தூர்‌ ரைஸ்மில்‌ ரோடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.89 சுண்டக்காமுத்தூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.90 கோவைப்புதார்‌ சி.பி.எம்‌.கல்லாரி, வார்டு எண்‌.91 குளத்துப்பாளையம்‌ அரசு மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.92 பி.கே.புதூர்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, வார்டு எண்‌.93 இடையா்பாளையம்‌, சர்ச்‌ வீதி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.94 குறிச்சி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, வார்டு எண்‌.95 என்‌.பி.இட்டேரி சாலை, டெக்ஸ்சிட்டி செவிலியா கல்லாரி, வார்டு எண்‌.90 சாரதா மில்‌ ரோடு சாரதா வித்யாலயா ஆரம்பப்பள்ளி, வார்டு எண்‌.93 குறிச்சி, சாரதா மில்‌ ரோடு, செங்கோட்டையா உயர்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.99 கோணவாய்க்கால்‌பாளையம்‌, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, வார்டு எண்‌.100 கணேசபுரம்‌, மாநகராட்சி

ஆரம்பப்பள்ளி, வார்டு எண்‌.97 கே.வி.கே.நகார்‌, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தாவைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌, நகராட்சி, பேரூராட்சி என 50 இடங்களிலும்‌, மொத்தம்‌ 150 இடங்களில்‌ மாவட்டத்தின்‌ அனைத்து துறை அதிகாரிகள்‌ நேரில்‌ சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறும்‌ மாபெரும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரையாற்றிய மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்களுக்கும்‌, இந்நிகழ்ச்சியில்‌ முன்னிலை வகித்து மாவட்டம்‌ முழுவதும்‌ முதலமைச்சரின்‌ எண்ணங்களை, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக்கொண்டு இருக்கின்ற மாவட்ட ஆட்சித்‌ தலைவருக்கும்‌ எனது பாராட்டுக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

முதலமைச்சரின்‌ மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ள பெரியோர்கள்‌, தாய்மார்கள்‌, இளைஞர்கள்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ நான்‌ ஒரு உறுதியளிக்கிறேன்‌ இங்கு வருகை தந்துள்ள மாவட்டத்தின்‌ அனைத்து துறையைச்‌ சார்ந்த அதிகாரிகளும்‌ உங்களது கோரிக்கை மனுக்கள்‌ மீது உரிய வகையில்‌ மிக விரைவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து முதலமைச்சரின்‌ அரசு உத்தரவுகள்‌ உங்கள்‌ கரங்களில்‌ விரைவாக கொண்டுவந்து சோக்கப்படும்‌ என்ற உறுதியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ இதுவரை நடைபெறாத ஒரு சரித்திர சாதனையாக முதலமைச்சர்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 100 வார்டுகளில்‌ ஒரு வார்டுக்கு ஒரு இடமென தோர்வு செய்யப்பட்டு பொதுமக்களை நேரில்‌ சென்று சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு உரிய தாவுகளைக்‌ காணவேண்டுமென உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்‌. சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ நேற்று நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ வார்டு எண்‌.59, 60, 61, 62, 63 மற்றும்‌ 64 ஆகிய 6 வார்டுகளில்‌ பொதுமக்களிடமிருந்து 3833 மனுக்கள்‌ பெறப்பட்டது. இன்று நடைபெற்ற தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 79, 85 முதல்‌ 100வது வார்டு பகுதிகள்‌ வரை ஏறத்தாழ 17 இடங்களில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ அதிகமாக மனுக்கள்‌ முதியோர்‌ உதவித்தொகைக்காக வரப்பெற்ற, மனுக்கள்‌ மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ யாருக்கெல்லாம்‌ முதியோர்‌ உதவித்தொகை விண்ணப்பித்து விடுபட்டிருக்கிறது என கண்டறியப்பட்டு விரைவாக முதலமைச்சர் ஆட்சியில்‌ அனைவருக்கு முதியோர்‌ உதவித்தொகை வழங்கப்படும்‌ என்ற உறுதியையும்‌, இந்தப்பகுதியில்‌ அதிகமாக தங்க நகைகள்‌ செய்யக்கூடிய தொழில்‌ வாத்தகம்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கின்றன அவர்களுக்கு பல்வேறு இன்னல்கள்‌, இடையூறுகள்‌, தேவைகள்‌ இருக்கின்றன அந்த தேவைகளைக்‌ கேட்டு முதலமைச்சரின்‌ கவனத்திற்கு எடுத்து சென்று விரைவாக நிறைவேற்றப்படும்‌ என்ற உறுதியையும்‌, கோவை மாநகராட்சியை பொறுத்தவரை நேற்று நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ பொதுமக்கள்‌ அளித்த மனுக்களில்‌ கோவை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில்‌ 9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது என்றும்‌, அதேபோல்‌ கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌ முழுவதுமே ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு மேலாகத்தான்‌ குடிநீர் விநியோகம்‌ செய்யப்படுகிறது என்றும்‌ தெரிவித்திருந்தார்‌.

எனவே, அதனை கருத்தில்‌ கொண்டு மிக விரைவாக கோவை மாநகராட்சிப்‌ பகுதிகள்‌ முழுவதும்‌ கணக்கெடுக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்‌ அளவிற்கு முதலமைச்சர்‌ உத்தரவின்படி சிறப்புத்‌ திட்டம்‌ அமைக்கப்பட்டு, சிறப்பு நிதிகள்‌ பெற்று மேம்படுத்தக்‌ கூடிய பணிகளை முன்னெடுக்கப்பட உள்ளது. அதற்கு தயார்‌ செய்யக்‌ கூடிய பணிகள்‌ தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பிலும்‌, குடிநீர் வாரியத்தின்‌ சார்பிலும்‌ திட்ட மதிப்பீடுகள்‌ தயார்‌ செய்யும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல்‌ இந்த பகுதிகளிலுள்ள கால்வாய்கள்‌ துர்வாரப்பட்டு அடைப்புகள்‌ சரிசெய்யப்படும்‌. மேலும்‌, மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடைத்‌ திட்டம்‌ முழுமையாக நிறைவேற்றப்படாமல்‌ உள்ளது. அதனை மிக விரைவாக தொண்டாமுத்தூர்‌ தொகுதி முழுவதும்‌ பாதாள சாக்கடைத்‌ திட்டத்திற்கான நிதிகளை பெற்று அதற்கான முன்னேற்பாடுகள்‌ மேற்கொள்ளப்படும்‌ என்ற உறுதியையும்‌, கோயம்புத்தூர்‌

மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளும்‌ கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு நிதிகளை பெற்று சாலைகள்‌ சரிசெய்யப்பட்டு விரைவில்‌ தீர்வு காணப்படும்‌ என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்‌.

மேலும்‌ தேர்தல்‌ நேரத்தில்‌ முதலமைச்சர் 505 வாக்குறுதிகளைத்‌ தந்தார்‌. அதில்‌ முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற 5 மாத காலத்தில்‌ 202 வாக்குறுதிகளை நிறைவேற்றித்‌ தந்திருக்கின்றார்‌. குறிப்பாக தாய்மார்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு 4 ஆயிரம்‌ நிவாரண உதவித்தொகை மற்றும்‌ கோவிட்‌ காலத்தில்‌ 14 வகையான பொருட்கள்‌ இலவசமாக வழங்கியிருக்கின்றார். பெட்ரோல்‌ விலை மற்றும்‌ ஆவின்‌ பால்‌ விற்பனை விலைகளை குறைத்துள்ளார்‌. மேலும்‌, அரசு பேருந்துகளில்‌ மகளிருக்கு இலவச பயணம்‌ என பல்வேறு சிறப்புத்‌ திட்டங்களை அறிவித்திருக்கின்றார். கோவை மாவட்டத்தின்‌ வளர்ச்சிக்கு, மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகள்‌ உட்பட 234 தொகுதிகளிலும்‌ பல்வேறு சிறப்பு திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர்‌ வழங்க இருக்கின்றார்‌. மேலும்‌, இந்நிகழ்ச்சிக்கு வந்து மனுக்களை கொடுத்துள்ள அனைவரின்‌ கோரிக்கைகள்‌ மீதும்‌ நிச்சயம்‌ துறை ரீதியாக தீர்வு காணப்படும்‌ என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்‌ என மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தார்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி‌ தெரிவித்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கோவை‌ மாநகராட்சி உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ ஸ்ட்ரீட்‌ ஆட்‌ இந்தியா பவுண்டேசன்‌ சார்பில்‌ குடிசை மாற்று வாரியம்‌ கட்டிட சுவற்றில்‌ அழகு ஓவியம்‌ வரையும்‌ பணியை மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொடங்கி வைத்த பின்னார்‌, கரும்புக்கடை பகுதிகளில்‌ ரூ.82 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலை வசதிகள்‌ மற்றும்‌ புதியதாக அரசு மருத்துவமனை அமைத்துத்தரப்படும்‌. மேலும்‌, பள்ளி வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. மழைநீர் வடிகால்‌ கால்வாய்கள்‌, பாதாள சாக்கடை வசதிகள்‌ அமைத்துத்தரப்படும்‌ என தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, முன்னாள்‌ அமைச்சா்‌ பொங்களுர்‌ பழனிசாமி, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினா்‌ சி.ஆர்‌.இராமச்சந்திரன்‌, முன்னாள்‌ சிங்காநல்லூர்‌ தொகுதி சட்டமன்ற உறுப்பினா்‌ நா.கார்த்திக்‌, மாநகராட்சி முன்னாள்‌ மேயர்‌ கணபதி ப.ராஜ்குமார்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ என்‌.அண்ணாத்துரை மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...