பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பொள்ளாச்சி உடுமலை சாலை அருகில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14- வயது சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாரிமுத்து மகன் மகரஜோதி (31) உட்பட 5- பேரின் மீது புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5- பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு சம்பந்தமாகக் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களுக்குக் குண்டர் சட்டம் பிறப்பிக்கப் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் 5-பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கோவை மாவட்டத்தில் பாலியல் கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...