கோவையில் சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு பகுதிகளில்‌ 'மக்கள்‌ சபை நிகழ்ச்சி'.!!

மாநகராட்சி சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 59, 60, 61, 63, 64, 62 ஆகிய வார்டு பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌கொண்டார்‌.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 59, 60, 61, 63, 64, 62 ஆகிய வார்டு பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்‌.



தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உள்ள பொதுமக்கள்‌ தங்களது வார்டு பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ இதர வசதிகள்‌ தொடர்பான குறைகள்‌ குறித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடும்‌ வகையில்‌, சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு பகுதிகளில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி‌ தலைமையில்‌ பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சி இன்று 30.10.2021 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ முன்னிலை வகித்தார்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வரவேற்புரையாற்றினார்‌. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59 SIHS காலனி மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளி, வார்டு எண்‌.60 SMS லே-அவுட்‌ மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளி, வார்டு எண்‌.61 நந்தா நகர்‌ மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளி, வார்டு எண்‌.63 கள்ளிமடை மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளி, வார்டு எண்‌.64 வரதராஜபுரம்‌ மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளி வார்டு எண்‌.62 அய்யர்‌ லே-அவுட்‌ மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளி ஆகிய பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தாவைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி‌ பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்‌ கொண்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌, நகராட்சி, பேரூராட்சி என 50 இடங்களிலும்‌, மொத்தம்‌ 150 இடங்களில்‌ மாவட்டத்தின்‌ அனைத்து துறை அதிகாரிகள்‌ நேரில்‌ சென்று மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறும்‌ மாபெரும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சிக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வரவேற்புரையாற்றிய மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையாளர்‌

அவர்களுக்கும்‌, இந்நிகழ்ச்சியில்‌ முன்னிலை வகித்து மாவட்டம்‌ முழுவதும்‌ முதலமைச்சரின்‌ எண்ணங்களை, திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டு இருக்கின்ற மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களுக்கும்‌ எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

முதலமைச்சரின்‌ மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ள பெரியோர்கள்‌, தாய்மார்கள்‌, இளைஞர்கள்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ நான்‌ ஒரு உறுதியளிக்கிறேன்‌ இங்கு வருகை தந்துள்ள மாவட்டத்தின்‌ அனைத்து துறையைச்‌ சார்ந்த அதிகாரிகளும்‌ உங்களது கோரிக்கை மனுக்கள்‌ மீது உரிய வகையில்‌ மிக விரைவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து முதலமைச்சரின்‌ அரசு உத்தரவுகள்‌ உங்கள்‌ கரங்களில்‌ விரைவாகக் கொண்டுவந்து சோக்கப்படும்‌ என்ற உறுதியைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

சிங்காநல்லூர்‌ சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை இந்த 59வது வார்டில்‌ சாலைகள்‌ மிகவும்‌ பழுதடைந்துள்ளது. அதனை முதலமைச்சரின்‌ கவனத்திற்குக் கொண்டு சென்று சிறப்பு நிதியின்‌ மூலம்‌ அனைத்து சாலைகளும்‌ சீர் செய்யப்படும்‌. மேலும்‌, பாதாளச் சாக்கடைத்‌ திட்டம்‌ முழுமையாக நிறைவேற்றப்படாமல்‌ உள்ளது. அதனை மிக விரைவாக சிங்காநல்லூர்‌ தொகுதி முழுவதும்‌ பாதாளச் சாக்கடைத்‌ திட்டத்திற்கான நிதிகளைப் பெற்று அதற்கான முன்னேற்பாடுகள்‌ மேற்கொள்ளப்படும்‌ என்ற உறுதியையும்‌, அதேபோல இரயில்வே மேம்பாலம்‌ பணிகள்‌ நிதிகள்‌ ஒதுக்காமல்‌ நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகள்‌ கூடிய விரைவில்‌ முடிக்கப்படும்‌ என்பதையும்‌, இங்கு மனுக்கள்‌ பெறும்‌ நிகழ்ச்சி மட்டுமல்லாமல்‌, தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளும்‌ முகாம்களும்‌, முதலமைச்சர்‌ கரங்களால்‌ துவக்கி வைக்கப்பட்ட “மக்களைத்‌ தேடி மருத்துவம்‌” என்ற சிறப்பான திட்டமும்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக நமது கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 70,819 பேர் மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தின்‌ மூலம்‌ ஏழை மக்கள்‌ பயன்பெற்றுள்ளனர்‌. அதேபோல்‌ “உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌”? என்ற சிறப்புத்துறையை உருவாக்கி அதற்கென தனி அதிகாரிகள்‌ நியமிக்கப்பட்டு கோவை மாவட்டத்தில்‌ வழங்கப்பட்ட 38,277 மனுக்களில்‌ ஏறத்தாழ 13,439 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களும்‌ துறை ரீதியாக விரைவில்‌ தீர்வு காணப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது. அதனை 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்‌ செய்யும்‌ அளவிற்குச் சிறப்புத்‌ திட்டம்‌ அமைக்கப்பட்டு, சிறப்பு நிதிகள்‌ பெற்று மேம்படுத்தக்‌ கூடிய பணிகளை முன்னெடுக்கப்பட உள்ளது.

அதற்குத் தயார்‌ செய்யக்‌ கூடிய பணிகள்‌ தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பிலும்‌, குடிநீர் வாரியத்தின்‌ சார்பிலும்‌ திட்ட மதிப்பீடுகள்‌ தயார்‌ செய்யும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிக்கு வந்து மனுக்களைக் கொடுத்துள்ள அனைவரின்‌ கோரிக்கைகள்‌ மீதும்‌ நிச்சயம்‌ துறை ரீதியாகத் தீர்வு காணப்படும்‌ என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்‌ என மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தாவைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ செந்தில்குமார்‌ ரத்தினம்‌, முன்னாள்‌ அமைச்சர் பொங்களுர் பழனிசாமி, முன்னாள்‌ சிங்காநல்லூர்‌ தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ நா.கார்த்திக்‌, முன்னாள்‌ கிழக்கு மண்டல தலைவர்‌ எஸ்‌.எம்‌.சாமி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...