கோவை வடவள்ளி அருகே வியாபாரியைத் தாக்கி 2-கிலோ தங்கம் கொள்ளை.!!

கத்தியால் குத்திக் கொன்று விடுவோம் என மிரட்டி நகை வியாபாரியை தாக்கி அவரிடம் இருந்து 2-கிலோ தங்கம், ரூ.7-லட்சம் ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்த கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு.


கோவை: கத்தியால் குத்திக் கொன்று விடுவோம் என மிரட்டி நகை வியாபாரியை தாக்கி அவரிடம் இருந்து 2-கிலோ தங்கம், ரூ.7-லட்சம் ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்த கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). தங்க நகை வியாபாரி. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்குச் சென்று சொந்தமாகத் தங்கத்தை வாங்கி வந்து பின்னர் அதனை நகைகளாக மாற்றி சத்தியமங்கலத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

நேற்று காலை சத்தியமங்கலத்திற்குச் சென்ற சண்முகம் அங்கு 2-கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு இரவில் கோவை வந்தார். பின்னர் காந்திபுரத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குப் புறப்பட்டார்.

காந்திபுரத்திலிருந்து வடவள்ளியை நோக்கி மோட்டார் சைக்கிளில் இவர் சென்று கொண்டிருந்த போது, 2-பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் 2-பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

தொண்டாமுத்தூர் வந்த போது பின்னால் வந்த 2-பேரும் திடீரென சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை முந்தி வந்து, அவரை மறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி வேகமாகச் சண்முகத்தை நோக்கி வந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, உன்னிடம் தங்கம் இருப்பது எங்களுக்குத் தெரியும். அதை எங்களிடம் கொடுத்து விட்டு இங்கிருந்து செல் என்றனர்.

ஆனால் கொடுக்க மறுக்கவே கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்திக் கொன்று விடுவோம் என மிரட்டி, அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து 2-கிலோ தங்கம், ரூ.7-லட்சம் ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்தனர்.

பின்னர் அவரை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சண்முகம் எழுந்து ஓடி வந்து அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் 2-பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டனர்.

இது குறித்து சண்முகம் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் ஏதாவது கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சண்முகம் தங்கம் வாங்கி விற்பதை அறிந்தே கொள்ளையர்கள் தங்கள் திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். மேலும் இவர்கள் பல நாட்கள் அவரை பின் தொடர்ந்து வந்து கண்காணித்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்த நபர்கள் யார்? இதில் 2 பேர் மட்டும் தான் ஈடுபட்டனரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...