திமுக அரசின் சாதனை குறித்து அவதூறு போஸ்டர்..! கோவை அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

திமுக அரசு குறித்து அவதூறான வாசங்கங்களுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்து பீளமேடு போலீசார் ரகுபதி என்ற அதிமுக நிர்வாகியிடம் விசாரணை.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல பகுதிகளில் தமிழக மின் வாரியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்ட மக்கள் சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், கோவையில் நேற்று பீளமேடு, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் 'திமுக விடியல் அரசின் 5 மாத கால சாதனை' என்ற பெயரில் அவதூறான கருத்துகள் அடங்கிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் அதிமுக நிர்வாகி ரகுபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...