திருப்பூரில் சாலையைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்.!!

திருப்பூரில் சாலையைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, காவல்துறையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து மனுவாக எழுதி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என முடிவெடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் சாலையைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லம் பாளையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்துவருகின்றன.



இந்நிலையில் கடந்த சில மாதங்களாகப் பாதாளச் சாக்கடை குடிநீர் குழாய் இணைப்பு என பல்வேறு காரணங்களுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் மழை நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து வீட்டிற்குள் வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக பழுதடைந்த சாலைகளைச் சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஒரு மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து மனுவாக எழுதி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என முடிவெடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...