நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு அனுமதி அளித்த ஆளுநரை, பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு அனுமதி அளித்த ஆளுநரை, பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோவை இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நீட் தேர்வினால் இருபத்தி மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த நீட் தேர்வினால் இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தி ஸ்வரன் என்கின்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்ட இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பாக ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியப் பிரதமருக்கு எதிராகவும், தமிழக ஆளுநருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறிது நேரம் சாலை மறியல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவல்துறையினர் ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் மாணவ-மாணவிகள் என 30-க்கு மேற்பட்ட நபர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.