வால்பாறையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து பாதிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வால்பாறையில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வால்பாறையில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி ஒரு வழிச்சாலை ஆகும். இங்குச் சாலையின் இரண்டு புறங்களிலும் கடைகள் உள்ளதால் குறுகிய சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் புத்தாடைகள் பொருட்கள் வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதாலும் அதிக மக்கள் வால்பாறைக்கு வருகை தருகின்றனர்.



வால்பாறையில் போதுமான இடவசதி இல்லாமல் இருப்பதாலும் பொருள்களை வாங்க வரும் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் சாலையோரம் கடையின் முன் நிறுத்தி விட்டுச் செல்வதாலும் அதனால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

வால்பாறை பகுதியில் வாகன நிறுத்த இடமில்லாமல் உள்ள நிலையில் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவலர்கள் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் பண்டிகை காலங்களில் அதிக வாகனங்களும் சுற்றுலாப் பயணிகளும் வால்பாறைக்கு வருவதால் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்து அங்கு வாகனங்களை நிறுத்திச் செல்ல வலியுறுத்துமாறு கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...