234-தொகுதிகளிலும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்-செந்தில் பாலாஜி புகழாரம்.!!

234-தொகுதிகளையும், தன் தொகுதியாக எண்ணி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம் சூட்டினார்.



கோவை: 234-தொகுதிகளையும், தன் தொகுதியாக எண்ணி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம் சூட்டினார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பொண்ணையராஜபுரம் மாரண்ண கவுண்டர் ஆரம்பப் பள்ளியில் பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.



பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 150-இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடைபெறுகிறது. எனவும், இந்தக் கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாநகராட்சியின் 6-வார்டுகளில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பெரும்பாலான மனுக்களில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் பொதுமக்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் அடிப்படை கட்டமைப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள 5-மாதங்களில் வழங்கப்பட்டுள்ள 505- வாக்குறுதிகளில் 202-வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றியுள்ளார். எனவும் அதேபோல தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டுத் திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 234-தொகுதிகளையும் தனது தொகுதிகளாக எண்ணி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், மின்சாரத் துறையில் உள்ள 56-ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...